இத்தாலி….
இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி. 26 வயதாகும் இவர் வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
கொரோனா காலகட்டத்தில் கடை மூடப்பட்டதால், வேலை இன்றி மனமுடைந்த நிலையில் இருந்த ஆங்கி, தனது ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தார். அதேசமயம் நல்ல வருவாயும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை லக்ஸி கிளப்பில் நடக்கவிருக்கும் ஆபாச டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஆங்கியை தான் புக் செய்தனர். ஆனால் சொன்ன நேரத்தையும் தாண்டி ஆங்கி நிகழ்ச்சிக்கு வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவரது ரசிகர்களில் ஒருவர் தான் ஆங்கியை கடத்தி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை தேடிய போலீஸாருக்கு, அவரது பெயர் டேவிட் ஃபோன்டானா என்பதும், புகைப்படக் கலைஞரான இவர் ஆங்கியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போன்டானாவும், ஆங்கியும் மிகவும் நெருக்கமாகவே பழகி வந்ததும், இருப்பினும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், ஆங்கியை தீர்த்து கட்ட ஃபோன்டானா முடிவு செய்ததும் தெரியவந்துள்ளது.
முடிவு செய்தபடி, ஆங்கியை தனது வீட்டிற்கு வரவழைத்த அவர் ஆங்கியை சுத்தியால் அடித்துக் கொன்று, சடலத்தை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயில் எரித்ததாக தெரிகிறது. மீண்டும் எரித்த உடல் பாகங்களை ஒரு சாக்குப் பையில் கட்டி சாலையில் தூக்கிவீசியுள்ளார்.
இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்ட ஃபோன்டானா, ஆங்கியை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அவரிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.