கோவை…….
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெ.டி.த்.ததில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இருதய நோயாளி ஒருவரை அழைத்துச்சென்று அனுமதித்த நிலையில் 108 ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றும்போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
உடனடியாக ஊழியர்கள் வெளியேறிதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை . இந்த சூழ்நிலையில் உரிய பராமரிப்பு இல்லாததும் இவ்விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது .