ஆம்புலன்ஸ் வர வழியில்லை : கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து செல்லும் சோகம் : கண்ணீர் வீடியோ!!

356

கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து செல்லும் சோகம்…

அவசர ஊர்தி வர வழியில்லாததால், பெண்மணியை தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொண்டகன் மோஹன்பேடா பகுதியை சார்ந்த பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், இந்த கிராமத்திற்கு அவசர ஊர்தி வர சரிவர பாதை இல்லை.

இதனால் அவசர ஊர்தி விரைந்து வந்து மேற்படி வர இயலாது சிக்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் உதவி கேட்கவே, இதே பகுதியை சார்ந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் பெண்ணை கம்புகளுக்கு நடுவில் தொட்டில் போல கட்டி, பெண்ணை அமர வைத்து தூக்கி சென்றனர்.

பின்னர் பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் அவசர ஊர்தி மூலமாக அனுமதி செய்யப்பட்டு, அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்த வசியம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், அந்த கிராமத்திற்கு சாலை சேவையை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.