இன்றைய நாளுக்கான ராசிபலன் (18-07-2021) உங்களுக்கு எப்படி ?

663

இன்றைய ராசிபலன்…

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய லட்சியங்களை நோக்கி பயணிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதில் நினைக்கும் விஷயம் ஒன்று நடைபெற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றத்தை காணும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கக் கூடிய வலிமை பிறக்கும். உங்களை மட்டம் தட்டியவர்கள் முன்பு துணிச்சலாக முன்னேறி காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அவர்களைப் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை நிதானம் காப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் சூழ்நிலையைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உங்களுடைய பங்களிப்பு கூடுதலாக அமையுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் பாதக பலன்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் காணும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி மனதில் புதிய உற்சாகம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமண சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்கள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட வேண்டாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. தில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது உத்தமம். எந்த ஒரு முடிவையும் பிறரின் ஆலோசனை இல்லாமல் எடுப்பதை தவிர்க்கவும். பூர்விக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பாதக பலன்கள் ஏற்படும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகி வரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும், சுபகாரியங்கள் கூடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பு மற்றவர்களை திருப்தி அளிக்கும் விதமாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய இனிய நாள். ஆரோக்கியம் கவனம் தேவை.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். நீண்ட நாள் தடைபட்ட முக்கியமான நிகழ்வு ஒன்று மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் நடக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரிய தொகை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை சீராக வரும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வார்த்தைகளை பிரயோகிக்கும் முன்பு எச்சரிக்கை தேவை. கொட்டிய வார்த்தைகளை மீண்டும் அல்ல முடியாது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இருக்கும் பெரிய மனிதர்களின் ஆலோசனை கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் சில நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.