இன்றைய நாளுக்கான ராசிபலன் (19-03-2021) உங்களுக்கு எப்படி ?

338

இன்றைய ராசிபலன்…………….

மேஷம்

மேஷம்: தங்களின் செயலில் வேகம் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து போங்கள். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குச் சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டு அறிவீர்கள். யோகா தியானம் எனமனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஆதரிப்பார்.நல்லது நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்வீர்கள். பிள்ளைகளால் பயனடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை திட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் புதிய முயற்சியை மேல் அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டு அறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த கால புதிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகனம் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பேச்சியில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னை ஒன்று தீரும். உங்களிடம் பழகும் நண்பர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.