இன்றைய நாளுக்கான ராசிபலன் (31-03-2021) உங்களுக்கு எப்படி ?

244

இன்றைய ராசிபலன்……

மேஷம்

மேஷம்: ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார் உதவுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளி ஊர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டவர்களின் மனசு மாறும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்கள் தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனமகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிட்ட செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சமாத்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக் கையை ஏற்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.