இன்றைய நாளுக்கான ராசிபலன் (10-03-2021) உங்களுக்கு எப்படி ?

299

இன்றைய ராசிபலன்…

மேஷம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமை வெளிப்படும் நாள்.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகூமுறையால் சாதிக்கும் நாள்.

கன்னி

புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கும்பம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவார்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.