இன்றைய ராசிபலன் (12-10-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

976

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அந்தஸ்து உயரும் நாள்.