இன்றைய ராசிபலன் (15-11-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

822

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மதிப்பீட்டுக்கு உகந்த நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவு கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதிக்கும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவுகளால் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புக்கள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.