இன்ஸ்டாவில் கணவனை போல் நடித்து நிர்வாணப் படம் கேட்ட சைக்கோ இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

279

இன்ஸ்டாகிராமில்…

இன்ஸ்டாகிராமில் கணவனை போல நடித்து பக்கத்து வீட்டு  பெண்ணில் நிர்வாண படத்தை பெற்று இளைஞர் ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருபது வயது இளைஞனைப் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இணையதளம் பேஸ்புக்  டுவிட்டர் என தொழில்நுட்பம் வளர வளர சமூக குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு குற்றங்கள் சைபர் கிரைம் தொழில்நுட்பத்தை மையமாக வைத்தே  நடைபெறுகிறது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சமூக வளர்ச்சிக்கு பயன்படுவதை காட்டிலும் அதை தவறான வழிகளில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது. அதுதான் இது போன்ற சமூக வலைதள குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. ஆன்லைனில் பண மோசடி செய்வது, தனிப்பட்ட விவரங்களை திருடி வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது.

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதை தவறாக பயன்படுத்துவது போன்ற எண்ணற்ற சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த வரிசையில் இன்ஸ்டாவில் போலீ ஐடியை பயன்படுத்தி பக்கத்து வீட்டு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று 20 வயது இளைஞன்

பிளாக்மெயில் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை கபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இள வயது தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  சமீபத்தில் அவரது கணவர் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார்.

அதில் இருந்து  மனைவிக்கு சில கோரிக்கை (request)வந்தது. அவரது மனைவியும் அதை ஏற்றுக்கொண்டார்.  பின்னர் அந்த ஐடியில் இருந்து  அவரின் மனைவிக்கு சில அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி கேட்கப்பட்டது, தனது கணவர் தானே கேட்கிறார் என எண்ணிய அந்த பெண், சில அந்தரங்க, நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அது திரும்ப திரும்ப கேட்கப்பட்டதால் எரிச்சலடைந்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அனுப்ப முடியாது எனக் கூறினார்.

புகைப்படங்களை அனுப்ப விட்டால் தன்னிடம் ஏற்கனவே உள்ள புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் வந்தது. முதலில் அதை விளையாட்டாக எண்ணிய அந்தப்  பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. கணவர் வீட்டுக்கு வரட்டும் கச்சேரி வைத்துக் கொள்ளலாம் என இருந்தார்.

கணவர் மாலை வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் இது குறித்து கேட்டு சண்டையிட்டார். அப்போது அதிர்ச்சி அடைந்த கணவன் தன்னிடம் இன்ஸ்டாகிராம் இல்லை என கூற அதைக் கேட்டு அவரது மனைவி ஆடிப்போனார்.

அப்படி என்றால் தன்னிடம் அந்த புகைப்படங்களை கேட்டது யார் என பதறினார். உடனே தம்பதியர் இருவரும் அதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து களத்தில் இறங்கினார்.

அப்போது ஐபி முகவரியின் அடிப்படையில் ஆராய்ந்தபோது அது பக்கத்து வீட்டு 20 வயது இளைஞருடையது என தெரியவந்தது. அந்த இளைஞரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது தான் இன்ஸ்டாவில் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை கேட்டதை ஒப்புக்கொண்டார்.

அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் சுய விவரத்தில் உள்ள புகைப்படங்களில் ஒன்றை சேகரித்து அவரது கணவரின் பெயரில் இன்ஸ்டா ஐடி உருவாக்கியதாகவும், அதைவைத்து அந்தப் பெண்ணுக்கு சாட் செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றதாகவும் கூறி  போலீசாரையே அதிர வைத்தார் அந்த இளைஞர்.

மேலும் கடந்த ஆண்டு நவராத்திரி கொண்டாடும் போது தனக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும். அதை மனதில் வைத்து அந்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கில் அந்தப் பெண்ணுக்கு இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் அந்த இளைஞர் கூறினார்.

இதனையடுத்து பாலியல் துன்புறுத்தல் , இணையத் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞனை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .