இப்படியொரு கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசை : பிரபல நடிகை குமுறல்!!

458

ராஷ்மிகா மந்தனா….

கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு, குட்பை மற்றும் புஷ்பா என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்று ஓவியம் ஒன்றை வரைந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அதை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரொம்பவே ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

மேலும், அதற்கு அச்சாரம் போடுவதுபோல ரசிகர் தன்னை பெங்காலி பெண் போலவே ஓவியம் வரைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.