சரவணன்…
தமிழ் சினிமாவில் எவ்வளவு முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களில் பொருந்தும் அந்த வகையில் ஒரு சில நடிகர்களுக்கு அந்த கதையில் நடிக்க முடியவில்லை என்றால் அவரைப் போன்று இருக்கும் மற்ற நடிகர்களை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பார்கள்.
அந்த வகையில் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்களால் நடிக்க முடியாத திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றிப் படமாக மாற்றி கொடுத்தவர்தான் நடிகர் சரவணன். நடிகர் சரவணன் அவர்கள் சேலத்தில் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிறந்தார் இவருடைய தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
சரவணன் அவர்கள் ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார் இவர் தான் இவரது வீட்டின் இரண்டாவது மகன் இவரது தாய் ஒரு செவிலியர். நமது சரவணன் அவர்கள் பல கவிதைகளை எழுதியுள்ளார் ஏனென்றால் இவர் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
நடிகர் சரவணன் அவர்கள் 1990ல் இருந்து இவர் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் 1993ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி மாமியார் வீடு, சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும் ,பெற்றெடுத்த பிள்ளை, முத்துப்பாண்டி ,செவத்த பொண்ணு ,தாய் மனசு, தம்பிதுரை என இவர் நிறைய திரைப் படங்களில் சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருக்கிறார்.
அதன் பின்பு இவர் சீக்கிரத்தில் திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்துகொண்ட பிறகு இவரால் திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் விடாமல் வாய்ப்பு தேடி இருந்தார் ஆனால் அதன் பின்பு கதாநாயகனாக நடிக்க முடியவில்லை 2001ஆம் ஆண்டு மீண்டும் நந்தா எனும் திரைப்படத்தை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசவில்லை அதற்கு அடுத்தபடியாக 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட கூறலாம் அதன் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார் தற்பொழுது வரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் காமெடி கதாபாத்திரத்தில் வி ல்லனாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டு ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்திருக்கிறது. ஆனால் இவர் தனித்தனியாக வீட்டில் இருக்கவில்லை இரண்டு மனைவிகளும் மற்றும் குழந்தைகளோடு ஒரே வீட்டில் இவர் சந்தோசமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.