இரத்த அழுத்த மருந்தை தவறுதலாக சாப்பிட்டதால் உயிரிழந்த மனைவி : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

221

மைசூர்….

இந்தியாவில் மனைவி உயிரிழந்த இரண்டு மாதங்கள் கழித்து அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி காயத்ரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகேஷின் மனைவி காயத்ரி, பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த மருந்துகளுக்கு பதிலாக தவறான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

மனைவி உயிரிழந்ததில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மகேஷ். இதையடுத்து பல முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விஷம் குடித்த மகேஷ் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் தனது சகோதரருக்கு போன் செய்த மககேஷ் தனது இரண்டு குழந்தைகளையும் கவனித்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.