இரத்த தானம் தருவதால் கிடைக்கும் நன்மைகள்!

969

இரத்த தானங்கள் மூலம் இதனை பெறுபவருக்கு மட்டுமல்ல கொடுப்பவருக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.அது பற்றி இப்போது பார்ப்போம்.

இரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயங்கள் குறைகிறது. இரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவு அதிகரிக்கும் போது சில சமயம் அது இதயநோய்க்கு வழி வகுக்கிறது. முறையான இடைவெளியில் இரத்த தானம் செய்வதன் மூலம் இந்த இரும்பு சத்து அதிகரிப்பு ஏற்படாமல் இதயத்தை காத்து கொள்ள முடியும்.

இரத்ததானம் செய்த பின் உடல் இழந்த ரத்தத்திற்கு இணையாக புது இரத்தம் உருவாவதற்கான உழைக்கிறது. அதன் மூலம் நம் உடலில் புதிய செல்கள் உருவாக்கம் அதிகரிக்கும். இது நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இரத்த தானம் செய்வதால் புற்று நோய் ஏற்படுவத்திலிருந்து நம் உடல் காக்கப்படுகிறது. உடலின் இரும்பு சத்து அதிகரிப்பதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ரத்த தானம் செய்வதன் மூலம் இந்த அபாயத்தை தவிர்த்து கொள்ளலாம்

இரத்ததானம் செய்கையில் நமக்கான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.இரத்த தானம் செய்வதற்கு முன் HIV , ஹெப்பாட்டிடீஸ் , சிபிலிஸ் , மற்றும் மலேரியா போன்றவைகளுக்காக நமக்கு சிறிய இரத்த சோதனை செய்வதால் இந்த பரிசோதனையை நாம் இலவசமாக பெற்று கொள்ள முடியும். மேலும் நமது உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம் போன்றவையும் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்படும்.

நீங்கள் இரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவரின் உயிரையும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கிறீர்கள். நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள் அது மட்டுமன்றி அதன் மூலம் அவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறீர்கள்.

எனவே நீங்கள் இரத்த தானம் கொடுப்பதன் மூலம் மனம் மட்டும் நிம்மதி அடைவதில்லை உடலும் ஆரோக்கியம் அடைகிறது