இரவு நேரத்தில் கெஞ்சிய 2 திருநங்கைகள் : நம்பி காரில் ஏற்றிய தொழிலதிபருக்கு நேர்ந்த கதி!!

473

2 திருநங்கைகள்….

 

தமிழகத்தில் இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு கெஞ்சிய இரண்டு திருநங்கைகளுக்கு உதவிய தொழிலதிபர் இறுதியில் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான். கட்டிட கலை நிபுணரான இவர் வேலை விஷயமாக சத்தியமங்கலம் வரை சென்றுள்ளார்.

அங்கு பணிகளை முடித்து நாமக்கல் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, 2 திருநங்கைகள் வழிமறித்துள்ளனர். அப்போது அவர்கள் இரவு நேரம், பேருந்து எதுவும் போகவில்லை, தங்களுக்கு லிப்ட் கொடுக்கும் படி கெஞ்சியுள்ளனர்.

இதையடுத்து ரகுமான் அவர்களுக்கு உதவிய போது, காரின் உள்ளே நுழைந்த அந்த திருநங்கைகள், திடீரென்று ரகுமானின் பேண்ட், சட்டைகளில் கையை விட்டு, பணம், மோதிரம் என அனைத்தையும் பறித்துவிட்டு மி ரட்டியுள்ளனர்.

இதனால் அ திர்ச்சியடைந்த ரகுமான் அவர்களிடமிருந்து தப்பி, உடனடியாக காரை ஓட்டி சென்று, நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக பொலிசார் அங்கு விரைந்த போது, குறித்த 2 திருநங்கைகளும் அங்கே நின்றுள்ளனர்.

உடனடியாக அவர்களை பிடித்து பொலிசார் கைது செய்தனர். பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒருவர் நாமக்கல் கொழந்தான் தெருவை சேர்ந்த அர்ச்சனா என்பதும் மற்றொருவர் சேலம் ஓமலூரைச் சேர்ந்த ரேகா என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள், இப்படி திருடி, வழிப்பறி செய்வதுதான் அவர்கள் தொழிலாக 2 பேரும் வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.