நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ்தாக்குதலின் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி இவர்களை கவனித்து வந்த லினி என்ற செவிலியரும் இந்த வைரசின் தாக்குதலால் பலியாகினார்.
திருமணமனமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான லினி, இறப்பதற்கு முன் கணவனுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், சாஜி சேட்டா நான் மரணத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன். மன்னித்து விடுங்கள்.
நமது குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத நமது குழந்தைகளை உங்களுடனே அழைத்து செல்லுங்கள். தந்தை இல்லாமல் அவர்கள் தனியாக இருக்கக்கூடாது எழுதியுள்ளார்.