இறந்த பெண் உயிருடன் வந்த அதிசயம்: வியப்பில் மருத்துவர்கள்!!

1021

தென் ஆப்பிரிக்காவில் இறந்துவிட்டார் என நினைத்து குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் Gauteng மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி பெண் ஒருவர் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேசமயம் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண், இறந்துவிட்டதாக கூறி Carletonville பகுதியில் பிணங்கள் வைக்கப்படும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து, அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஒவ்வொரு குளிர்சாதன பெட்டியையும் திறந்து, தன்னிடம் இருந்த படிவங்களை நிரப்பி கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் ஒரு பெட்டியை வெளியில் இழுக்கும்பொழுது, உள்ளே இருந்த பெண் உயிருடன் மூச்சு விடுவதை பார்த்த அவர், அதிர்ச்சியில் உடனடியாக தலைமை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பேசிய மருத்துவ தலைமை நிர்வாக அதிகாரி Paul Morule, இதுகுறித்து Gauteng சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.