இறப்புக்கு கூட யாரும் வரவில்லை ! கண்ணீருடன் எம்எஸ் ராஜேஸ்வரியின் மகன்!!

672

புகழ்பெற்ற பாடகி எம்எஸ் ராஜேஸ்வரிக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தாதது வருத்தமளிப்பதாக அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.குழந்தைகளில் குரலில் பாடும் அசாத்திய திறமை கொண்ட பாடகி எம்எஸ் ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

இவருக்கு வயது 85, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமைக்கு உரியவர்1960 தொடங்கி 1990 வரை கொஞ்சும் மழலைக்குரலில் பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தவர்.

இவருக்கு கற்பகவள்ளி, ஆர்த்தி என்ற இரண்டு மகள்களும், ராஜ் வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர், இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆர்த்தி மரணமடைந்து விட்டார்.இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த ராஜேஸ்வரி, நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் காலமானார்.

இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ள நிலையில், திரைத்துறையில் இருந்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் அவர், எங்கள் குடும்பத்தை விட திரைத்துறை மீது அம்மா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.

அம்மாவின் இறப்பு, இறுதிச்சடங்கு குறித்து அறிவித்த போதும் யாரும் எங்களை தொடர்பு கொள்ளாதது வருத்தமளிக்கிறது, யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன், அப்போது அவரது ஆன்மா சாந்தி அடையும் என தெரிவித்துள்ளார்.