வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
இந்த வருடத்தினுள் 2 லட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அதற்கான ந ட வடிக்கைகள் மே ற்கொ.ள்.ள.ப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் 2 லட்சம் தொழில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வருடத்தில் ஜப்பானிற்கு மாத்திரம் 20000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஜப்பான் மொழி கற்பது கட்டாயமயாகும்.
அதற்கமைய 1000 பேர் கொண்ட முதல் குழுவினருக்கு ஜப்பான் மொழி கற்பிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். இதுவரையில் புதிய தொழில் சந்தர்ப்பங்கள்ள இலங்கைக்கு கி டைத்துக் கொ.ண்.டி.ருக்கின்றது. மேலும் சில நாடுகளின் தூதுவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.