கடல்சார் அருங்காட்சியகம்……….
இலங்கையின் முதல் முறையாக பிரமாண்டமான கடல்சார் அருங்காட்சியகம் ஒன்று கல்பிட்டியில் திறக்கப்பட உள்ளது.
பல்வேறு கடல் விலங்குகளின் எலும்புக்கூடு கட்டமைப்புகளை காட்சிபப்டுத்தி முடிந்த பின் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்பு கடல் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
கல்பிட்டி குடாவாவில் அமைக்கப்படவுள்ள கடல்சார் அருங்காட்சியகம் வனவிலங்குத் துறைக்குச் சொந்தமான ஒரு பெரிய நிலத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
கடற்கரையில் ஒரு பெரிய திமிங்கலம் கரைக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட உள்ளது.
இந்த திமிங்கல எலும்புக்கூட்டைத் தவிர, கடல்சார் டால்பின்கள், கடல் பன்றிகள் மற்றும் ஆமைகள் போன்ற பல கடல் பாலூட்டிகளின் நேரடி மாதிரிகளை காட்சிக்கு வைக்க உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் கடற்பாசி மற்றும் பவளங்களின் மாதிரி விபரங்களும் காட்சிக்கு வைக்கப்படும்,” என்று கூறப்படுகிறது.
இருப்பினும், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.