இளைஞர்……..
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு தனக்குள் பெண்மை இருப்பதை உணர்ந்துள்ளார்.
இதனால், தீவிர யோசனைக்குப் பின்னர் தான் பெண்ணாக மாறிவிடலாம் என முடிவு செய்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் என்ற மருத்துவரை அணுகி தனது ஆசை குறித்து அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த மருத்துவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அறுவை சிகிச்சையும் தொடங்கியது.
12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை இறுதியாக வெற்றியில் முடிந்தது. அதன்பயனாக 22 வயது இளைஞர் தான் ஆசைப்பட்டது போல இளம்பெண்ணாக மாறினார்.
மேலும், இளைஞனாக இருந்து இளம்பெண்ணாக மாறிய அவர், தான் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறினார். தற்போது தான் முழு பெண்மையை உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவருக்குத் திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 2 வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணாக மாறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆடை அலங்கார துறையில் நிபுணராக இருக்கும் ‘யாரா’ தற்போது மாடலாகவும் கலக்கி வருகிறார்.