இளசுகளின் மனங்களை இளகச் செய்த சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

585

சமந்தா..

தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவர் நாக சைத்தன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை இந்திய சினிமா அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாராவும் மற்றொரு நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், ஊர் ஊராக சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என லைம் லைட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி அருவிக்கு சமீபத்தில் சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். இதைப்பார்த்த சில நெட்டிசன்கள் ‘உனக்கு ஜில்லுன்னு இருக்கு… எங்களுக்கு சூடாகுது!’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.