இளவரசர் ஹரியின் இதயத்தை கவர்ந்த அனாதைச் சிறுவன் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண நிகழ்வு!!

1307

ஆப்பிரிக்காவில் உள்ள அனாதை சிறுவனுக்கு இளவரசர் ஹரி தனது திருமண அழைப்பிதழை அனுப்பி சிறப்பித்துள்ளார்.

Lesotho நகரில் செயல்பட்டு வரும் ஹரியின் தொண்டு நிறுவனத்தில் அதிகமான அனாதை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளில் Mutsu Potsane என்ற சிறுவன் ஹரியின் இதயதுக்கு மிகவும் நெருக்கமானவன்.

14 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிறுவனை ஹரி சந்தித்துள்ளார். எப்போதும் இளவரசர் சென்றாலும் அவரை அன்போடு அணைத்துக்கொள்வார்.

அதுபோன்று, இச்சிறுவனும் இளவரசர் ஹரி வந்துவிட்டால், அவரை அன்போது சென்று வரவேற்பார். சிறு வயதில் ஹரியை சந்தித்த இச்சிறுவனின் வயது தற்போது 15.

தற்போது, இச்சிறுவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதாக, தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். தனக்கு திருமண அழைப்பிதழ் வந்தது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்த இச்சிறுவன் திருமணத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளான்.

இச்சிறுவனோடு சேர்ந்து இளவரசர் ஹரி அதிகமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.