இளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி!!

828

முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேஹன் மார்க்கலின் திருமணத்தில் மணப்பெண் தோழியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தற்போது ‘Quantico’ எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

சுமார் 64 நாடுகளில் இந்த தொடர் ஒளிபரப்பாவதால் உலகம் முழுவதும் பிரியங்கா சோப்ரா பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், பிரித்தானிய இளவரசர் ஹரி – மேஹன் மார்க்கல் ஆகியோரின் திருமணத்திற்காக அரச குடும்பத்தினர் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், மேஹனின் மணப்பெண் தோழியாக பிரியங்கா கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் எந்த உடையை தெரிவு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

இது தொடர்பாக பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘எனக்கு மேஹனை கடந்த மூன்று ஆண்டுகளாக தெரியும். அவரது அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.

மேஹனை நான் அறிந்த நாள் முதல், ஒரு அரச குடும்பத்தின் வருங்கால மருமகளாக இந்த உலகம் மேஹனை எதிர்கொள்ளும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

இன்றைய உலகின் மிகச்சிறந்த சமூகப் போராளியாகத் திகழும் மேஹன், பிரித்தானிய அரச குடும்பத்திற்கான இளவரசி என்பதை விட மக்களுக்கான இளவரசி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.இந்த உலகுக்கு மேஹன் மாதிரியான பெண்களே சிறந்த முன் உதாரணங்களாகத் திகழத்தக்கவர்கள்’ என தெரிவித்துள்ளார்.