இளைஞனின் தவறான செயலால் கேள்விக்குறியான 2 பட்டதாரி இளம்பெண்களின் வாழ்க்கை : நடந்தது என்ன?

433

இளைஞனின்..

தமிழகத்தில் இளைஞன் ஒருவரின் தவறான செயலால் இரண்டு இளம்பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (29).

இவரும் முதுநிலை பட்டதாரியான சண்முகப் பிரியாவும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட லெனின் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சண்முகப்பிரியாவிடம் தனிமையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, கர்ப்பமான சண்முகப்பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லெனினிடம் கேட்க அவர் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லியுள்ளார்.

ஆனால், சண்முகப்பிரியா கர்ப்பத்தைக் கலைக்காத நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் சண்முகப்பிரியாவால் ஊருக்கு வர முடியவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்ட லெனின் ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவுக்கு லெனின் திருமணம் செய்த விடயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சண்முகப்பிரியா, லெனின் என்பவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். அவரால் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகாரளித்தார்.

சண்முகப்பிரியா பொலிஸ் புகார் கொடுத்ததையறிந்த லெனின் விஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் நேற்று சண்முகப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த லெனின், சிகிச்சை பலனின்றி இ றந்து விட்டார். இது சண்முகப்பிரியாவின் குடும்பத்தை பெரும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், லெனின் செய்த தவறான செயலால் இன்றைக்கு இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. இதில், கொடுமை என்னவென்றால் சண்முகப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது தெரியாமலேயே லெனின் இ றந்துவிட்டார்.

லெனினை நம்பி காதலித்த சண்முகப்பிரியா மற்றும் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு லெனினை கரம் பிடித்த ஐஸ்வர்யா என இரண்டு பெண்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.