இளம்பெண்
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் போட்டோயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் நிற்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது.
இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும் சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் அணி தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு காரணம், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரே…
அதாவது, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சிக்சர் கிளிக் செய்த கேமரா, மைதானத்தில் உட்கார்ந்த பாகிஸ்தான் ரசிகை புகைப்படத்தை தொலைகாட்சியில் காட்ட, அந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பாகிஸ்தான் அழகு இந்திய ரசிகர்களின் நாயகியாக மாறியுள்ளார்.
இந்த பாகிஸ்தான் பெண்ணின் அழகை பார்த்த இந்திய ரசிகர்கள் பிசிசிஐ-யிடம் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடத்த வேண்டும் என்று சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.