தலைவலி…
பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.
மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி , களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதிலும் சில உணவுகள் கூட ஒற்றைத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது.
அந்தவகையில் தற்போது ஒற்றைவலியை தூண்டக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலி தாக்குதல்களுக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன. சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலியை 22 சதவிகிதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு கொண்டுள்ளது.
- அதிகப்படியான காஃபின் உட்கொள்வது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். சாக்லேட், காபி, டீயில் அதிக அளவு காஃபின் உள்ளது.
- ஒற்றைத் தலைவலி கொண்டவர்களில் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஒற்றை தலைவலியின் தூண்டுதலுக்கும் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை இனிப்புகள் நிரம்பியுள்ளன. இது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். எனவே இனி செயற்கை இனிப்பை தவிர்த்துவிடுங்கள்.
- MSG என்பது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பு. இது சில உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது கடுமையான ஒற்றைத் தலைவலியை தூண்டலாம்.
- நிறம் மற்றும் சுவையைப் பாதுகாக்கும் நைட்ரேட்டுகள் இறைச்சிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டெலி மீட், ஹாம், ஹாட் டாக், சாசேஜ் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் நைட்ரிக் ஆக்சைடை இரத்தத்தில் வெளியிடுகின்றன, இது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும்.
- புளித்த உணவுகளும் ஒற்றைத் தலைவலியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது பன்னீர் , சோயா சாஸ் போன்றவை கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.