இந்தியாவில் மாமியார் கிண்டல் செய்ததால் விருந்து சாப்பாட்டில் மருமகள் விஷத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுபாஷ் மனே – ஜோதி வர்வாஸ்.
இவர்கள் தங்களுடைய புதுமனை புகுவிழாவுக்காக உறவினர்களை அழைத்திருந்தனர். இந்த விழாவிற்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இந்த விழாவின் போது உணவை சாப்பிட்ட பலருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் 120 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, உணவை பரிமாறிய ஜோதி வர்வாஸை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் தான் கருப்பு என்பதால், மாமானார்-மாமியார் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகவும், திருமண வாழ்க்கையிலும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விருந்து நிகழ்ச்சியின் போது கூட அவர்கள் தன்னை ஆத்திரமூட்டியதால், கோபத்தில், பாம்புகளை கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்தை பருப்புக்குழம்பில் கலந்ததாகவும், அதனை உறவினர்கள் அனைவருக்கும் தானே பரிமாறியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.