தமிழகத்தில் தவறான உறவை அக்கா மற்றும் அவரின் கணவர் கண்டித்ததால், இருவரை திட்டம் தீட்டி கொலை செய்துள்ள தங்கையின் செயல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்த தம்பதி தர்மலிங்கம்- மீனாட்சி. இதில் மீனாட்சிக்கு மைதிலி என்ற சகோதரி உள்ளார்.
அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மைதலிக்கும், வேறொரு இளைஞருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மீனாட்சி-தர்மலிங்கம் தம்பதி, மைதிலியை கண்டித்துள்ளனர்.
உண்மை வெளியில் தெரிந்துவிட்டதால், தொடர்ந்து கண்டித்து வந்ததால், ஆத்திரமடைந்த மைதலி தர்மலிங்கம்-மீனாட்சி இருவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி தர்மலிங்கத்துக்கு மதுவிலும், மீனாட்சிக்கு உணவிலும் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் தர்மலிங்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் திகதியும், மீனாட்சி ஜனவரி 13-ஆம் திகதியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தர்மலிங்கத்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் சகோதரர் குமார், அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த போது, மைதிலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது மைதலியும், பாலமுருகனும் சேர்ந்து தர்மலிங்கம் – மீனாட்சி தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர்களிடம் கையெழுத்து வாங்கி, வங்கியில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் இருவர் திருடியிருப்பது தெரியவந்தது.
பொலிசார் நடத்திய தொடர் விசாரணையின் காரணமாக இருவரையும் பொலிசார் ஒன்றரை ஆண்டுக்கு பின் கைது செய்துள்ளனர்.