உண்மையைக் கூறிய மும்தாஜ்!!

570

பிக்பாஸ் 2 -இல் கலந்து கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ் முதன்முறையாக தனது வயதை வெளிப்படையாக கூறியுள்ளார்.கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் -2, ஜூன் 17 -ஆ ம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்குபெற்றுள்ளனர்.100 நாள்கள் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் வாரக்கடைசியான நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பங்கேற்பாளர்களுடன் அகம் ரி.வி வழியாக பேசினார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது.

பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருடனும் பேசிய கமல்ஹாசனிடம் மும்தாஜ் மனதளவில் குழந்தை போல் உள்ளதாக போட்டியாளர் ஒருவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த மும்தாஜ் தனக்கு 37 வயது ஆகிறது என வெளிப்படையாகக் கூறினார். இதைக்கேட்ட கமல்ஹாசன் நான் என்னுடைய வயதை சொல்லுவதே இல்லை. ஆனாலும் என்னுடைய வயது அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்று கூறிச் சிரித்தார்.

அப்போது குறுக்கிட்ட மும்தாஜ், எவ்வளவு நாள் தான் வயதை மறைக்க முடியும் என கூறினார்.நடிகர், நடிகைகள் பலரும் தங்களது உண்மையான வயதை கூறத் தயங்கும் நிலையில் மும்தாஜ் வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.