உன் அம்மாவை போலவே நீயும் என்னிடம் இரு : மாணவியிடம் அத்துமீறிய எலும்பு முறிவு டாக்டர்!!

420

சிவகங்கை…

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

சிறுமியின் தாய்க்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், மருத்துவர் மோகன்குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சிறுமியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி மருத்துவர் மோகன்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

தாயின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த மகள் இதுதொடர்பாக தந்தைக்கு புகார் அளித்துள்ளார். தந்தையும், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

மேலும், மாணவியின் தோளில் கை போட்டுக் கொண்டு அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, நீயும் என்னுடன் இதே போல நெருக்கமாக இரு என கூறியுள்ளார்.

கொ ரோனா காலத்தில் மாணவி ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த டாக்டர், பயாலஜி சொல்லித் தருகிறேன் என கூறி அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து இது போல தான் பாடத்தில் வரும் என தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.

இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி இணையதளம் மூலமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த எலும்பு முறிவு மருத்துவர் மோகன்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.