உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்!!

1062

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணொருவர் தனது நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஓபி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஓபி ஆறுதலுக்காக தனது நெருங்கிய தோழி கிளாரா வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.அப்போது தான் கிளாரவின் 60 வயதான தந்தையை பார்த்துள்ளார். அவரின் பொறுமையான குணமும், அன்பான மனமும் ஓபியை ஈர்த்துள்ளது.

இதையடுத்து இருவரும் நெருங்கிய நட்பானார்கள், நட்பானது நாளடைவில் இருவருக்குளும் காதலாக மாறியது.கிளாராவின் தந்தையின் மனைவி உயிரோடு இருந்தும், ஓபியை அவர் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

இதற்கு அவர் மனைவியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதையடுத்து ஓபியும், கிளாராவின் தந்தையும் திருமணம் செய்து கொண்டனர்.இது குறித்து ஓபி கூறுகையில், எங்களுக்குள் இருப்பது ஒரு நல்ல உறவு, என் கணவர் என்னுடன் நேரம் செலவழிப்பதோடு அவர் முதல் மனைவி குடும்பத்துடனும் நேரம் செலவழக்கிறார்.

எங்களுக்குள் 30 வயது வித்தியாசம் இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை.வாழ்க்கை மிகவும் சிறியது, அதனால் சிறிய விடயத்தை எல்லாம் நினைத்து கவலைப்படக் கூடாது என கூறியுள்ளார்.