உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின்: வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்….!

327

போலீஸ்…..

ஹரியானா மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின் ஒருவரின் கையில் குற்றவாளியின் வண்டி எண் இருந்ததால் அதன் உதவியால் விசாரணை செய்தபோது குற்றவாளிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தில் உள்ள கார் பார்க்கிங் ஒன்றில் ஒரு சிலர் மது அருந்திக்கொண்டு இருந்ததால், இரண்டு போலீசார்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது அருந்தியவர்கள் காவலர்கள் இருவரை கூர்மையான ஆயுதத்தால் கடுமையான தாக்கியதாக தெரிகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த காவலர்கள் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்

இந்த நிலையில் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தபோது ஒரு காவலரின் உள்ளங்கையில் குற்றவாளியின் வண்டி எண் எழுதப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது குற்றவாளிகள் அனைவரும் சிக்கினார்கள்.

இதுகுறித்து அந்த மாவட்ட எஸ்பி தனது டுவிட்டரில் கூறியபோது ’உயிர் போகும் நேரத்திலும் தனது கடமையை சரியாக செய்யும் வகையில் புத்திசாலித்தனமாக குற்றவாளியின் வண்டி எண்ணை தனது உள்ளங்கையில் குறித்து வைத்துள்ள அவரது நடவடிக்கை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அவர் குறித்து வைத்த வண்டி எண் உதவியால் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிந்தது என்று கூறினார். மேலும் அவருக்கு வீர பதக்கம் பெற்றுத் தர பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்