உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த டிக் டாக் நிறுவனர்..!

736

சாங் யிமிங்…

கடந்த ஆண்டுர அமெரிக்கா, இந்தியா என முன்னணி நாடுகளால் புறக்கணிப்புக்கு ஆளான சீன செயலியான டிக்டாக்கின் நிறுவனர் சாங் யிமிங், உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

38 வயது மட்டுமே ஆகும் சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 4 லட்சத்து 38 ஆயிரம் கோடிகளை தொட்டுள்ளதாக புளூம்பெர்க் கோடீஸ்வர ர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கின் உரிமையாளரான பைட்டேன்சின் (ByteDance) சந்தை மதிப்பு 18 லட்சத்து 25 ஆயிரம் கோடிகளாக உள்ளது.

அதில் சாங் யிமிங்கிற்கு 25 சதவிகித உரிமை உள்ளதால் அவரது நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. டிக்டாக்குடன் டவுடியாவ் (Toutiao) என்ற செய்தி தளத்தையும் பைட்டான்ஸ் நடத்துகிறது.

இ காமர்ஸ், ஆன்லைன் கேமிங் என தனது தளங்களை விரிவுபடுத்தி, வருமானத்தை சாங் யிமிங் இரட்டிப்பாக்கி உள்ளார்.