உலக நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!!

329

நிபா வைரஸ்…

உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீ.வி.ரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, இலங்கையில் கொ ரோ னா வைரஸின் ப.ர.வலைக் க.ட்.டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், க.டு.மையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். வைரஸ் தொடர்பான எந்தவொரு தகவலையும் உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் பகிர்ந்து கொ ள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொ ற் றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகியவை பிற நாடுகளில், குறிப்பாக பிராந்தியத்தில் வைரஸ்கள் பரவுவதால் ஏற்படும் பா.தி.ப்புகளை கண்காணித்து வருகின்றது.

அவை சர்வதேச சுகாதார விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு மைய புள்ளியாகும். மற்ற நாடுகளில் நோ ய் ப.ர.வுவதை அவை கண்காணிக்கின்றன.

எந்தவொரு வைரஸிலிருந்தும் இலங்கைக்கு அ.ச்.சு.று.த்தல் இருந்தால் அது குறித்து தொ.ற்.றுநோ.யியல் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு தெரிவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.