உலகளவில் அதிக கடனில் தவிக்கும் நாடுகள்!

606

ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது , மத்திய அரசு கடன் வாங்கிய மொத்த தொகை மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பதாகும்.

இருப்பினும், ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது வாடிக்கையாளர்கள் , கடன் அட்டைகள் அல்லது வங்கிகள் மூலமாக எடுத்துக் கொள்ளும் கடனிலிருந்து வேறுபட்டதாகும்.

அரசாங்க கடன் என்பது ஒரு நாட்டின் மத்திய அரசாங்கம் கடன் வாங்கிய பணத்தின் கணக்காகும், அந்த நாட்டில் சேகரிக்கப்பட்ட வரிகள் மூலம் பணம் திருப்பிச் செலுத்தப்படாத கடனை அது குறிக்கும்.

செலவினத்தை மறைக்கப் போதுமான வருவாய் மற்றும் வரிகளைச் சேகரிக்கத் தவறியபோது ஒரு அரசாங்கம் கடன் வாங்கும் நிலை உண்டாகிறது. இந்தப் பணப் பற்றாக்குறையும் தேசிய கடனில் தான் சேர்கிறது.

2017ம் ஆண்டு, அரசாங்க கடன் மற்றும் ( GDP) உள்நாட்டு உற்பத்தி விகிதம் மூலம் முதல் 10 இடங்களைப் பற்றிய நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

ஜப்பான்

தேசிய கடன் : ¥1,028 trillion ($9.087 trillion USD)

தனி நபர் கடன் : $71,421 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம் : 220.82%

மக்கள் தொகை : 127.2 million

நாணயம் : ஜப்பானிய யென் (Japanese Yen (¥))

ஜப்பான் தற்போதைய கடனுக்கான ஜிடிபி விகிதம் அதிர்ச்சி தரும் அதே வேளையில், 2016 ஆம் ஆண்டில் இது 250.4% உயர்ந்து இருந்தது.

கிரீஸ்

தேசிய கடன் : €332.6 billion ($379 billion US)

தனி நபர் கடன் : $35,120 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம் : 179%

மக்கள் தொகை : 10.8 million

நாணயம் : யூரோ (Euro (€))

2010 ல் கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து சர்வதேச கடன் வழங்குவோர், நாட்டைப் பல முறை காப்பாற்றியுள்ளனர், மற்றும் அரசாங்க செலவினங்கள் கடன் அளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு கண்டிப்பான முயற்சியில் அந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.

போர்சுகல்

தேசிய கடன்: €232 billion ($264 billion US)

தனி நபர் கடன்: $25,538 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம்: 138.08%

மக்கள் தொகை: 10.37 million

நாணயம் : யூரோ (Euro (€))

2016ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் கடனுக்கான ஜிடிபி விகிதம் 130.4% இருந்தது. 2017ம் ஆண்டின் மத்தியில் இந்த அளவு 138.88% என்று அதிகரித்துள்ளது.

போர்ச்சுகலின் நலிவடைந்த பொருளாதாரம், மற்றும் 2016ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின் மிகக் குறைவான வளர்ச்சி போன்றவை இந்த நாட்டின் கடன் மதிப்பு வருங்காலத்தில் மேலும் சரியக்கூடும் என்று கூறப்படுகிறது.

இத்தாலி

தேசிய கடன்: €2.17 trillion ($2.48 trillion US)

தனி நபர் கடன்: $40,787 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம்: 137.81%

மக்கள் தொகை : 60.8 million

நாணயம் : யூரோ (Euro (€)

இத்தாலி, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்று மடங்கு மந்தநிலை தொடர்ந்து, நாட்டின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் வேலையின்மை அளவுகளால் இன்றும் போராடி வருகிறது.

பூட்டான்

தேசிய கடன் : $2.33 billion (USD)

தனி நபர் கடன்: $2,993 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம்: 118.6%

மக்கள் தொகை : 774,830

நாணயம்: பூட்டான்ஸ் நகுல்ரம் (Bhutanese Ngultrum)

சைப்ரஸ்

தேசிய கடன் : €18.95 billion ($21.64 billion USD)

தனி நபர் கடன் : $25,551

கடனுக்கான ஜிடிபி விகிதம் : 115.47%

மக்கள் தொகை: 847,008

நாணயம் : யூரோ (Euro (€))

பெல்ஜியம்

தேசிய கடன் : €399.5 billion ($456.18 billion USD)

தனி நபர் கடன் : $30,518 USD

கடனுக்கான ஜிடிபி விகிதம்: 114.78%

மக்கள் தொகை : 11.25 million

நாணயம் : யூரோ (Euro (€))

அமெரிக்கா

தேசிய கடன்: $19.23 trillion (USD)

தனி நபர் கடன் : $61,231 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம்: 106.1%

மக்கள் தொகை : 324.35 million

நாணயம் : யு.எஸ்.டாலர் (US Dollar)

ஸ்பெயின்

தேசிய கடன் : €1.09 trillion ($1.24 USD)

தனி நபர் கடன் : $26,724 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம் : 105.76%

மக்கள் தொகை : 46.7 million

நாணயம் : யூரோ (Euro (€))

சிங்கப்பூர்

தேசிய கடன் : $350 billion ($254 billion US)

தனி நபர் கடன் : $45,915 (USD)

கடனுக்கான ஜிடிபி விகிதம் : 104.7%

மக்கள் தொகை : 5.54 million

நாணயம் : சிங்கப்பூர் டாலர் (Singapore Dollar)