உலகின் விலையுயர்ந்த மதுபானம் வாங்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்!

760

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகின் மிகவும் விலை உயர்ந்த மதுபானத்தை வாங்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

லண்டன் நகரில் உள்ள ஹைடே கென்ஸிங்டன் என்ற பாரில் உலகின் மிகவும் விலை உயர்ந்த கொனாக் மதுபானம் உள்ளது. 1894ஆம் ஆண்டு ஜீன் பில்லியோக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த இந்த மதுபானம் வெறும் 40ml அளவே கொண்டது.

இதனை லண்டனைச் சேர்ந்த டிரினிட்டி நேச்சுரல் கேஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமானா ரஞ்சிதா தத் என்பவர் மார்ச் 21ஆம் தேதி வாங்கியுள்ளார்.

இதன் மூலம் உலகின் அதிக விலை கொண்ட மதுபானத்தை வாங்கியவர் என்ற பெயரில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவர் வாங்கிய 40ml மதுவின் விலை இந்திய மதிப்பில் ரூ.9.20 லட்சம்.