ஊரடங்கு முடிந்து வீட்டுக்கு மனைவி 3 குழந்தையுடன் திரும்பிய கணவனுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!

556

கணவனுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி…..

தமிழகத்தில் வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை ப றித்துக் கொண்டதாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கணவன் மனு கொடுத்த சம்பவம் ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று நடைபெறவில்லை. மாறாக பெட்டியில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், தாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கால் உறவினர் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றோம்.

தற்போது கடந்த 16 திகதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வாடகை செலுத்தினால் தான் வீட்டிற்குள் வரவேண்டும் என வீட்டின் உரிமையாளர் சாவியை ப றித்து விட்டார்.

இதனால் அ திர்ச்சியடைந்த நாங்கள் செய்வதறியாது கடந்த ஒருவாரமாக அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் சாப்பிட்டு விட்டு, உறவினர் வீட்டில் தங்கி வருகிறோம். எனவே வாடகை செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்கி வீட்டின் சாவியை மீட்டு தரவேண்டும்.

இல்லையெனில் குடும்பத்துடன் த ற் கொ லை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.