ஊருக்கு அழைத்து செல்லாத கணவர் : விரக்தியடைந்த இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

496

கோயம்புத்தூர்…

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது செலவுக்கு பணம் இல்லாததால் பின்னர் அழைத்து செல்வதாக திலீப்கியர்வார் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரீனா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு,

விரைந்து சென்று ரீனாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.