ஓவியா..
விமல் ஹீரோவாக நடித்து 2010ல் வெளியான படம் களவாணி. இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச்சேர்ந்த நடிகை ஓவியா.
இப்படம் வெளியாகும் முன்பே நாளை நமதே என்ற படத்திலும் ஓவியா சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக அசத்தியிருப்பார். இப்படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். இப்படத்திற்கு அடுத்தபடியாக உலகநாயகன் கமல், மாதவன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதன்பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு கோடான கோடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். ஓவியாவின் வாழ்க்கையை பிக்பாஸுக்கு முன் பிக்பாஸுக்கு பின் என்றே பிரிக்கலாம். அந்த அளவிற்கு பிக்பாஸில் இவர் மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸுக்கு பிறகு ஒரு சில படங்களில் தன் நடிப்பை தொடர்ந்தார். ஆனால் சில நாள்கள் ஆளே காணவில்லை. இந்த நிலையில் ரோட்டோரம் இருக்கும் ஒரு கரும்பு ஜூஸ் கடையில் நின்னு ஜூஸ் சாப்பிட காத்திருக்கும் போட்டோ ஒன்றை ஸேர் செய்துள்ளார்.