எட்டு குழந்தைகளை கொன்ற பெண் மருத்துவ ஊழியரின் புகைப்படம் வெளியானது: விவரம் உள்ளே

853

பிரித்தானியாவிலுள்ள Countess of Chester மருத்துவமனையில் எட்டு குழந்தைகளை கொன்ற பெண் மருத்துவ ஊழியரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் Chesterஇலுள்ள 180,000 பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீட்டின் முன்பு பொலிசார் விசாரணை நடத்துவதற்கு அடையாளமாக நீல நிற கூடாரம் ஒன்றை அமைத்தனர்.

அந்த வீடு Lucy Letby என்னும் நர்ஸுக்கு சொந்தமானது. 2015க்கும் 2016க்கும் இடையே Countess of Chester மருத்துவமனையில் 17 குழந்தைகள் மர்மமாக இறந்த நிலையில் அது தொடர்பாக நடத்திய விசாரணையில் பெண் மருத்துவ ஊழியர் ஒருவர்தான் அந்தக் கொலைகளை செய்தவர் என்று தெரிய வந்ததோடு மேலும் ஆறு குழந்தைகளை அவர் கொல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் பொலிசார் Lucy Letby என்னும் நர்ஸை விசாரித்து வருகின்றனர். அதேபோல் Lucy Letbyஇன் பெற்றோரின் வீட்டிலும் பொலிஸ் விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையில் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர், Lucy Letby 2016ஆம் ஆண்டு, மருத்துவ பணியிலிருந்து அட்மின் பணிக்கு மாற்றபட்டதாக தெரிவித்தார்.

அவர் மீது சந்தேகம் இருந்தால் ஏன் அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார் அவர்.

Lucy Letby என்னும் நர்ஸ்தான் கொலை செய்தவர் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும் இன்னும் பொலிசார் அந்த செய்தியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.