எனக்காக இதை செய்யுங்க! தாடி பாலாஜி மனைவியிடம் பேசிய சிம்பு!!

776

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்க்கின்றனர்.

பாலாஜி தன்னை சாதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி தனக்கு தொல்லை தருவதாகவும், இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நித்யா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரிந்த வாழும், இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிம்பு. பாலாஜியின் மனைவி நித்யாவுடன் சுமார் 1 மணிநேரம் வீடியோ காலில் பேசிய சிம்பு, குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும், உங்கள் குடும்ப பிரச்சனையை பார்த்து மிகவும் வேதனையடைந்தேன்.

எனக்காகவும், உங்கள் கணவர் பாலாஜிக்காகவும் இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து அவருடன் சேர்ந்து வாழுங்கள் என கூறியதாக நித்யா தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய ஸ்டார், இவ்வாறு என்னிடம் கேட்டுக்கொண்டும் அப்போதைக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லையே என்பதை நினைக்கையில் கவலையாக இருக்கிறது என கூறுகிறார் நித்யா.