எனக்கு கிடைக்கவில்லையே? அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய நடிகர் கார்த்திக்!!

712

பிரபல திரைப்பட நடிகரான கார்த்திக் மேடையில் அப்பாவை நினைத்து கண்கலங்கியுள்ளார்.1990-ஆம் ஆண்டுகளில் கார்த்திக் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன் பின் நாட்கள் செல்ல செல்ல கார்த்திக் கதைக்கு முக்கியதுவம் தரும் படங்களிலே நடித்து வந்தார்.

இவரது மகனான கெளதம் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில், கார்த்திக்கும், கெளதமும் இணைந்து சந்திரமெளலி என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான ஆடியோ வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கெளதம் தனது அப்பாவான கார்த்திக்குடன் நடித்தைப் பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

அப்போது கார்த்திக் நான் அப்பாவுடன் நடிக்கவில்லை, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் இப்படி தான் சந்தோஷப் பட்டிருப்பேனோ என்று கண்கலங்கினார்.