என் கணவர் மற்றும் மகள் அருகில் செல்ல மாட்டேன்! கொரோனாவை எதிர்த்து போராடும் ஒரு செவிலியர்!!

480

செவிலியர்…………..

நேற்று உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலகில் பல இடங்களில் கொரோனா என்ற கொ.டி.ய அ.ர.க்.கனை எ.தி.ர்த்து மக்கள் போ.ரா.டி வருகின்றனர்.

இதற்கு உதவியாக இருப்பதில் செவிலியர்களின் பணி இன்றியமையாதது. முக்கியமாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை தொட்டுள்ளது.

பலரின் உ.யி.ர்களை காப்பாற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து செவிலியர்களும் போராடி வருகின்றனர். அப்படி ஒரு செவிலியரான ரோஷினி டக்கல் (40) என்பவரின் அனுபங்கள் குறித்து பார்ப்போம்.

ரோஷினி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். அவர் கூறுகையில், என் 14 வயது மகளை கட்டிபிடித்து கொஞ்சி சில மாதங்கள் ஆகிறது.

என் கணவர் சுபாஷ் தான் வீட்டை கவனித்து வருகிறார், ஏனெனில் நான் மருத்துவமனை பணிகளில் தான் அதிக நேரம் இருப்பேன்.

வீட்டுக்கு வந்தால் நான் தனியறையில் இருப்பேன். என் கணவர் மற்றும் மகள் அருகில் செல்ல மாட்டேன். என் மகள் அடிக்கடி கதவின் அருகே நின்று பாடுகிறாள். நானும் அவளுடன் சேர்ந்து பாடுவேன், ஆனால் அவளை என்னால் தொட தான் முடியாது என உருக்கமாக பேசியுள்ளார்.

கொரோனாவால் பல செவிலியர்கள் இறக்கிறார்கள், அவர்களின் குடும்பத்தை பாதுகாத்து தேவையான உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் ரோஷினி கூறியுள்ளார்.