என்னமா யோசிக்கிறாங்க ..காவலரின் பிரம்படியில் இருந்து தப்பிக்க நூதன வழி..வைரலாகும் வீடியோ காட்சி!

474

ஊரடங்கு…………

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களிடம் அபராதம் வசூலித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சில சமயங்களில் அவர்கள் கையில் உள்ள பிரம்பை கொண்டு அத்து மீறுபவர்கள் மீது அடிப்பதும் உண்டு.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்த சைக்கிள் ஓட்டி ஒருவர் காவலரின் பிரம்படியில் இருந்து தப்பிக்க நூதன முறையில் யோசித்து தனது சைக்கிள் சீட்டின் பின்புறத்தில் தகர ஷீட் ஒன்றை பொருத்தி உள்ளார்.

அதோடு தலையில் ஹெல்மெட்டும் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டி செல்கிறார் அவர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிலர் அந்த வீடியோவை ஆதரித்தும், சிலர் ஊரடங்கை மீறுவது எந்த வகையில் நியாயம் என்றும் கோபத்தில் பொங்கி வருகின்றனர்.