கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழ் பிக்பாஸ் கடந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் சர்ச்சையானலும் பின் மக்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரவ், சினேகன், ஹரீஷ், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.
இதில் ஓவியா மக்கள் மனதை வென்றுவிட்டார். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. இந்நிலையில் அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என பலருக்கு ஆர்வம் இருக்கிறது.
விரைவில் ஆரம்பிக்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் விளம்பரத்துக்கான படப்பிடிப்புகள் இன்று தொடங்கிவிட்டதாம். இன்னும் சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் கலந்துகொள்ள போகிறார்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது விரைவில் வெளிவரும்.