அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் வெள்ளையின பெண்மணி ஒருவர் 15 வயது கறுப்பின சிறுவனை இனவெறி ரீதியாக தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் Stephanie Sebby-Strempel என்ற வெள்ளையின பெண்மணி நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கையில், அங்கு 15 வயதுடைய கறுப்பின சிறுவன் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்க வந்துள்ளார்.
இதனைப்பார்த்து கோபம் கொண்ட அப்பெண்மணி, அந்த கறுப்பின சிறுவனை நோக்கி இனவெறி ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தி, கறுப்பினத்தை சேர்ந்த நீ நீச்சல்குள்ளத்திற்குள் இறங்காதே எனக்கூறிக்கொண்டே வந்து அந்த சிறுவனின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டுள்ளார்.
இதனை அச்சிறுவனுடன் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இப்பெண்மணியின் பேச்சை கேட்டு அவர்களும் நீச்சல்குளத்தை விட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தார் பேஸ்புக்கில் வெளியிட்டதையடுத்து 40,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இனவெறியை தூண்டிய அப்பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.