ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ்… நடந்தது என்ன? அ தி ர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

244

சரவணா ஸ்டோர்ஸு…………

சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அ தி ர் ச்சியடைய வைத்துள்ளது.

1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.

வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பலரும் வியந்து பார்க்கும் சரவணா ஸ்டோர்ஸுக்கு இந்தியன் வங்கியின் ‘வாராக் கடன் வசூலிப்பு பிரிவிலிருந்து நோட்டீஸ் விற்பனை நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸின் பங்குதாரர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் உரிமையாளர் பல்லாகு துரை பெயருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 288,08,67,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏலம் இன்று நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மை என்று தெரியவந்துள்ள நிலையில், வங்கிகள் வேலை நிறுத்தம் என்பதால் விரிவான தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.