ஏழைகள் கணக்குகளிலிருந்து அநியாயமாக ரூ. 300 கோடி வ சூலித்த எஸ்.பி.ஐ வங்கி! வெளியான தகவல்!!

247

எஸ்.பி.ஐ வங்கி…..

ஜீரோ பேலன்ஸ் கணக்குகளிலிருந்து சர்விஸ் சார்ஜஸ் என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழை வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ. 300 கோடியை எஸ்.பி.ஐ வங்கி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை ஐ.ஐ டி நடத்திய ஒரு ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல தேசிய வங்கிகளில் ஏழை மக்களுக்காக மத்திய அரசு ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை துவக்க உத்தரவிட்டது. இந்த கணக்கு வைத்திருப்போர் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச தொகை ஏதும் வைத்திருக்கத் தேவை இல்லை.

இந்த ஜீரோ பேலன்ஸ் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBDA) வைத்திருப்போர் மாதத்துக்கு 4 முறை பணம் செலுத்த மற்றும் எடுக்க முடியும். ஆனால் இந்த வங்கிகளில் இந்த கணக்குகளை வைத்திருப்போரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையொட்டி மும்பை ஐஐடி ஒரு ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில் பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் வசூலித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்வோரிடம் ஸ்டேட் வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 17.70 அபராதம் வசூலித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் (2015-2020) மட்டும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்போரிடம் இருந்து மட்டும் ரூ.300 கோஃபி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

SBI வங்கியில் நான்கு பரிவர்த்தனைக்கு மேல் செய்தால் ரூ. 17.70 அபராதம் வசூலிப்பதே இவ்வளவு அபராத வசூலுக்கு காரணமாக உள்ளது. ஸ்டேட் வங்கியில் மொத்தம் 12 கோடிக்கு மேல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் உள்ளன.

இந்த ரூ. 300 கோடியில் கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் ரூ. 72 கோடியும், 2019-20 ஆம் ஆண்டுகளில் ரு. 158 கோடியும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் SBI-க்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 9.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 3.9 கோடி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் உள்ளன.

ரிசர்வ் வங்கி ஆணைப்படி 4 முறை பணப் பரிவர்த்தனை செய்யலாம் எனவும் அதற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் மதிப்புக் கூட்டல் சேவை என கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு வங்கிகள் அபராதம் வசூலிப்பது வங்கி நிர்வாக முடிவைப் பொறுத்தது எனவும் அவசியம் அபராதம் விதிக்க வேண்டியது இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் ஏழைகளால் தொடங்கப்பட்டுள்ளதால் இந்த அபராதம் அவர்களுக்கு கடும் துயரத்தை அளிக்கும் என மும்பை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.