ஐ போன்.. நிலவுக்கு சுற்றுலா.. 100 சவரன் தங்கம் என வாக்குறுதிகளால் தமிழகத்தை மிரளவைத்தவர் எத்தனை வாக்குகள் பெற்றார்? வெளியான தகவல்!!

345

சரவணன்………….

தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தையே அசரவைத்த மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்கு விவரம் வெளியாகியுள்ளது.

ஐ போன், வருடத்திற்கு 1 கோடி, நிலவுக்கு சுற்றுலா, 100 சவரன் தங்க நகை, வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர், அனைவருக்கும் 3 மாடி வீடு, அனைத்து வீட்டுக்கும் கார் என தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகத்தையே மிரளவைத்வர் மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்யைாக போட்டியிட்ட துலாம் சரவணன்.

துலாம் சரவணனின் வாக்குறுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, சமூகவலைதளங்களில் சரவணின் வாக்குறுதி குறித்த மீம்ஸ்கள் கலக்கின. இந்நிலையில், சரவணின் எத்தனை வாக்குகள் பெறுவார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

மதுரை தெற்கு தொகுதியி் நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பூமிநாதன் 62,812 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.

அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 56,297 வாக்குகள் பெற்றார். மநீம வேட்பாளர் ஈஸ்வரன் (12,821), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபாஸ் (10,430) வாக்குகள் பெற்றனர். நோட்டவிற்கு (1551) வாக்குகள் பதிவானது.

சுயேச்சையாக போட்டியிட்ட சரவணன் நோட்டாவை விட குறைவாக 254 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை கிட்டதட்ட முடிந்த நிலையில் பிரதான கட்சிகளான திமுக-அதிமுக கூட்டணி கட்சிகளை தவிர்த்து வேறு எந்த கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.

அமமுக-தேமுதிக கூட்டணி, மநீம-சமக-ஐஜேகே கூட்டணி, தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.